டுபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 10-வது லீக் போட்டியில் மும்பைஇந்தியன்ஸ் அணியை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.. முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தொிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியும் 201 ஓட்டங்களையே எடுத்தமையினால் சுப்பா் ஓவா் வீசப்பட்டது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் 7 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 6 பந்தில் 8 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி கடைசி பந்தில் 1 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விராட் கோலி பவுண்டரி எடுத்து அணியின் ஸ்கோரை 11 ரன்களாக உயர்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் மும்பை அணியை சுப்பர் ஓவரில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. #IPL #ஐபிஎல் #மும்பைஇந்தியன்ஸ் #சுப்பர்ஓவர் #பெங்களூர்