Home உலகம்சார்க் கூட்டமைப்பு நாடுகளின் அமைப்புக்குழு கூட்டம் நேபாளத்தில் நடைபெறவுள்ளது

சார்க் கூட்டமைப்பு நாடுகளின் அமைப்புக்குழு கூட்டம் நேபாளத்தில் நடைபெறவுள்ளது

by admin

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில், இந்த வாரம் சார்க் கூட்டமைப்பு நாடுகளின்  உயரதிகாரிகள் பங்கேற்கும்  அமைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில்  நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 8 நாடுகள், சார்க் என்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் 19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்த போதும் ஜம்மு காஷ்மீரில்  இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை  அடுத்து இந்தியா  உள்ளிட்ட  நாடுகள்  புறக்கணித்ததால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரம் நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி அமைப்புக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து   பெப்ரவரி முதலாம் மற்றும் 2ம் திகதிகளில் இந்த கூட்டம் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், சார்க் நாடுகளுக்கிடையே உள்ள சில பிரச்சனைகள் மற்றும் சார்க் செயலகத்தின் வரவுசெலவுத்திட்டம்  மற்றும்  அடுத்த சார்க் மாநாட்டை நடத்துவதற்கான இடம் ,திகதி  என்பன குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More