தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டுள்ளார் என தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக 5.02.2017-ல் அனுப்பிய கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைதினம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.