Home உலகம்அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பில் விசாரணை

அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பில் விசாரணை

by admin

அவுஸ்திரேலியாவில் ஒரு முக்கிய விசாரணையில் அங்கு பல தசாப்தங்களாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தெரியவந்துள்ளது. பொது விசாரணையின் தொடக்கத்தில், சுமார் 2000 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் மேலும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4.500 பேர் என்றும் ரோயல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

சில கத்தோலிக்க மத குழுக்களைச் சேர்ந்த 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆறு பேராயர்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் முக்கிய கத்தோலிக்க அதிகாரிகள், ஆணையகத்திற்கு ஆதாரங்களை வழங்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவரான அடிலெய்ட் பேராயர் மீது குழந்தை பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை மறைத்ததாகவும்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

BBC

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More