Home இலங்கைஅக்காவையும், தம்பியையும், நித்திரையில் தூக்கிய கொரோனா!

அக்காவையும், தம்பியையும், நித்திரையில் தூக்கிய கொரோனா!

by admin

பூகொட – யகம்பே பிரதேசத்தில் நித்திரைக்குச் சென்ற அக்கா மற்றும் தம்பி இருவரும் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

43 வயதுடைய திருமணமாகாத சகோதரியும், 38 வயதுடைய சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று நித்திரைக்கு சென்றிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நேற்று காலை அவரது உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது அவர்கள் இருவரும் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து சுகாதார பிரிவிற்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.

பின்னர் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More