Home இலங்கைஇலங்கைக்கெதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இலங்கைக்கெதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

by admin

ஜெனீவாவில் , இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலை வகித்துள்ளன.

இந்தியா வாக்களிப்பில் இருந்து விலக்கிக்கொண்டதுடன் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன. 

இதேவேளை பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணையானது இலங்கையில் வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகாரத்துறை  அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம் நிராகரிப்பதாக பேரவையில் தெரிவித்துள்ளாா்.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More