Home இலங்கைதாக்குதலில் 3 வயது  குழந்தை பலி

தாக்குதலில் 3 வயது  குழந்தை பலி

by admin

மாத்தளை- உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும்  அவரது குழந்தைகள்  மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், 3 வயது  குழந்தை ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

இன்று காலை  தந்தை தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் .    உயிரிழந்த குழந்தையின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு  செனற்  நபா்  ஒருவர்    மேற்கொண்ட தாக்குதலில்  கடுமையான காயங்களுக்குள்ளான   38 வயதான தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும்   மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக   காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்  காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் எனத்   தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More