Home இலங்கைவடக்கில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிப்பு!

வடக்கில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிப்பு!

by admin

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாண காவற்துறை பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை காவற்துறை  பிராந்தியத்தில் 02 பேரும் , மன்னார் காவற்துறை  பிராந்தியத்தில் 06 பேரும், வவுனியா காவற்துறை  பிராந்தியத்தில் 05 பேரும், முல்லைத்தீவு காவற்துறை  பிராந்தியத்தில் 08 பேரும் மற்றும் கிளிநொச்சி காவற்துறை  பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

“நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More