Home இலங்கைதமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் கரிசனை இருப்பதாக கூறுகிறது JVP.

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் கரிசனை இருப்பதாக கூறுகிறது JVP.

by admin

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட  தமக்கு கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளதாக,  தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (09.04.24)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களின் தேசிய பிரச்சனை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை விட தமக்கு கரிசனை உண்டு. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களின் பிரச்சனையை இனம் கண்டுள்ளோம். அதற்கான தீர்வினை பரிந்துரை செய்யவுள்ளோம். தீர்வு என்ன என்பதை மிக விரைவில் தெரியப்படுத்துவோம். தற்போது அது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.”

அடுத்து தமிழ் கட்சிகளோடு பேசவுள்ளோம். தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவர்களுடையது. ஆனால் பொதுவான நிலைப்பாடு மாற்றம் வேண்டும் என்பதாகவே உள்ளது.

கடந்த 75 ஆண்டுகளாக நீலம் பச்சை என மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள்.எனவே மாற்றம் வேண்டும் என பெரும்பாலான மக்கள் சிந்திக்கின்றனர்.

அநுர தான் அடுத்தது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மாற்றத்தையே ஒட்டு மொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றர்.

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளர் பேசுவது மீள நீலம் , பச்சையை தான் வீறு கொள்ள வைக்கும் ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புவதாக  கூறியுள்ளார்..

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போது.

தமது மாநாட்டிற்கு கட்சி பேதமின்றி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும் யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை. தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More