கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலா்கள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்களுடன் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு 8.00 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவரை சோதனையிட்ட போதே அவா்களைக் காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இருவரும் குறித்த அமெரிக்க நாணயத்தாள்களை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும்கைப்பற்றப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.