Home இலங்கைசகோதரத்துவத்திற்கான பயணம்

சகோதரத்துவத்திற்கான பயணம்

by admin
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு நாளைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில்  நாளைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு  செல்லவுள்ளனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நாளை காலை 06,40 மணிக்கு பயணம் ஆரம்பமாகி, மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.  குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்களும், வழங்கும் நிகழ்வு இடம்பெறும். துபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும்  , நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகையிரதம் யாழ்ப்பாணத்தை  சென்றடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.   அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் வியாழக்கிழமை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More