Home இலங்கைதலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

by admin
 
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி (01-08-2025)  விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் இன்று (22) செவ்வாய்க்கிழமை கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (21) இரவு  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகு ஒன்றையும் அதிலிருந்து 4 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.பின்னர் குறித்த மீனவர்களையும்,இழுவைப் படகையும் கடற்படையினர் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More