Home இலங்கையாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!

யாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை (23.07.25) இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில், சுதுமலை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன்  என்பவரே படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற  இரு நபர்கள் குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More