Home இலங்கைநல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் . விருது வழங்கலும்

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் . விருது வழங்கலும்

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , யாழ் . மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் , நல்லைக்குமரன் மலர் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 33ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சைவத்திற்கும் தமிழுக்கும்  தொண்டாற்றியமைக்காக கௌரவமாக வழங்கப்படும் யாழ் .  விருது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஓய்வு நிலை விரிவுரையாளர் சின்னத்தம்பி குணசீலனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர்  மதிவதனி விவேகானந்தராஜா, யாழ் . மாநகர ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரன்  யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More