Home இலங்கைநெடுந்தீவில் வாள் வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்!

நெடுந்தீவில் வாள் வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்!

by admin

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில் , காவற்துறையினர் ஒருவரை   மடக்கி பிடித்து , கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16.09.25) இரவு இளைஞர்கள் குழு ஒன்று மது விருந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது , மோட்டார் சைக்கிள் வீதியில் செல்வோரை வாள்களை வீசி அச்சுறுத்தியவாறு பயணித்த வன்முறை கும்பல், விருந்தினர் விடுதிக்குள் சென்று , அங்கு மது விருந்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவற்துறையினர் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை , தாக்குதலாளிகள் காவற்துறையினர்  மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதன் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை காவற்துறையினர்  மடக்கி பிடித்து கைது செய்துள்ளதுடன் , தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More