தந்தை செல்வாவின் ஜனன தினம்

by admin

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128வது  ஜனன தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) நினைவு கூறப்பட்டது. மன்னாாில்  இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இன்று   காலை 10.15 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 அதேபோன்று  தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம்    யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்திலும்  நடைபெற்றது.  குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1898 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த இவர், தமிழர்களின் அரசியல் பயணத்தில் அழியாத தடம் பதித்த ஒரு தலைவராக இன்றும் போற்றப்படுகிறார்.
 
#ThanthaiSelva #SJV_Chelvanayakam #ITAK #JaffnaEvents #Mannar #Memorial #Jaffna
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More