காணாமல் ஆக்கப்பட்ட பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கை விசாரிக்க நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட உயர் நீதிமன்ற அமர்வை பிரதம நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன நியமித்துள்ளார்.
இந்த விசேட அமர்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நயனா சேனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மலி ஹேவாவசம் ஆகியோர் இடம்பெறுகின்றனர். பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி இரவு கடத்தப்பட்டார். இந்த சம்பவம் நடந்தது முதல் 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரது மரணம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#PrageethEkneligoda #Ekneligodadisappearancecase #SriLankajournalist #Missingjournalist #Enforceddisappearance #ChiefJusticeappointment

