55
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி இன்று (புதன்கிழமை) பயணிக்க இருந்த சிவகங்கை பயணிகள் கப்பலில் தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பேர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கை பிரஜைகளும், 17 இந்திய பிரஜைகளும் அடங்குவதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், சிலர் தங்கத்தை உடலுக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம் உண்மை நிலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் வரை சம்பவத்தின் முழுமையான விவரங்கள் காத்திருக்கப்படுகின்றன.
Spread the love

