56
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.எம். ராஜா ராஜா என்பவருக்காக இலங்கை இராணுவத்தின் “சேவா வனிதா” திட்டத்தின் கீழ் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிய வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இந்த வீடு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்குள் நிர்மாணித்து உரிமையாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீட்டிற்கான அடிக்கல்லை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நாட்டி வைத்தார். நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு பகுதியைச் சேர்ந்த சேவையாற்றும் படையினரின் நலனில் இராணுவம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், இத்தகைய வீடமைப்பு திட்டங்கள் சமூக நல்லிணக்கத்திற்கும் உதவியாக அமைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Spread the love

