யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகக் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, வெடிமருந்துகளுடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடைசெய்யப்பட்ட முறையில் மீன்பிடித்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்
இன்று (2026 ஜூன் 23, செவ்வாய்க்கிழமை) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மருதங்கேணிக் காவற்துறையினர் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சூழலுக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தும் வெடிமருந்துப் பயன்பாடு மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராகக் கடற்படையினரால் இந்தத் திடீர் முற்றுகை நடத்தப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்திச் சட்டவிரோத மீன்பிடி (Dynamite Fishing) இடம்பெறுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, ஆபத்தான வெடிமருந்துகளுடன் கடற்றொழிலாளர் ஒருவர் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டதுடன், அவரது மீன்பிடிப் படகும் (Boat) பறிமுதல் செய்யப்பட்டது. கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி காவல் நிலையத்தில் நிலையத்தில்) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதே கடற்பரப்பில் உத்தியோகபூர்வ மீன்பிடி அனுமதிப்பத்திரம் இன்றியும், தடைசெய்யப்பட்ட முறையில் அதிகளவிலான வெளிச்சம் பாய்ச்சி (Light Coarse Fishing) மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 7 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட 3 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்த 7 கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிகாரிகள் இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.
#VadamarachchiEast #IllegalFishingSL #DynamiteFishingArrest #MaruthankenyPolice#JaffnaFishermen

