குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொலம்பியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது படகில் பயணம் செய்த 133 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 28 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
170 பேர் பயணித்த படகு சுமார் ஐந்து நிமிட கால இடைவெளியில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ உலங்குவானூர்திகள், சுழியோடிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கொலம்பிய ஜனாதிபதி Juan Manuel Santos சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.