Home இந்தியாஎயர்செல் மக்சிஸ் வழக்கு தொடர்பில் மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எயர்செல் மக்சிஸ் வழக்கு தொடர்பில் மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

by admin

எயர்செல் மக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும்  முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்தனர் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  இன்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளையிலேயே  இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

எயர்செல்-மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு இவ்வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More