டெல்லி துக்ளக் சாலையில் அமைந்துள்ளது லோக் நாயக் பவன் கட்டிடத்தின் 4-ம் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அரசுத் துறை அலுவலகங்களில் இருந்த ஆவணங்கள் பல கருகி சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த கட்டிடத்தில் பல்வேறு மத்திய அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு பகுதியில் பற்றிய தீயானது கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 25 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.