Home இந்தியாகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து கிராம மக்களிடம .க. ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்தார்:-

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து கிராம மக்களிடம .க. ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்தார்:-

by admin


கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்தார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி பொதுமக்கள் மேற்கொண்டு வரும் தொடர் காத்திருப்பு போராட்டம இன்று 21-வது நாளாக நடைபெறுகின்றது.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று அங்கு சென்ற மு.க.ஸ்டாலின் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

இதன்போது அவரிடம் மனு கையளித்த பொதுமக்கள் போத்தலில் பிடித்து வைத்திருந்த எண்ணெய் கலந்த குடிநீரை காண்பித்ததுடன் ஓ.என்.ஜி.சி. பணியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. போராடும் எனத் தெரிவித்துள்ளர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More