Home இலங்கைகொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு மேற்கொண்டவர்கள் என தெரிவித்து இருவர் கைது

கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு மேற்கொண்டவர்கள் என தெரிவித்து இருவர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் நந்தாவில் அம்மன் வீதி பகுதியில்  கோப்பாய் காவல்நிலையத்தினைச் சேர்ந்த  இரு காவல்துறை உத்தியோகஸ்தர்களை    4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 க்கும்மேற்பட்டவர்கள்   வாளினால் வீசி தாக்குதல்  மேற்கொண்டிருந்தனர்.

வாள்வெட்டிற்கு இலக்காகிய இரு காவல்துறையினரும்; யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் நேற்றையதினம் யாழ்ப்பாணமட் சென்றிருந்த போது காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More