Home உலகம்சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலர் பலி

சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது. நில அதிர்வு காரணமாக குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 175 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வில் காயமடைந்தவர்களில் 28 பேரின் நிலைமை கவலைக்கிடம் என தெரிவிக்கப்படுகிறது.

பூமியதிர்வு ஏற்பட்ட இடம் பிரபல சுற்றுலா பிரதேசம் எனவும் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சுற்றுலாப் பயணிகள் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுமார் 3000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 7.0 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியது என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More