Home இலங்கைஇரகசிய கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பணத்தை நன்கொடையாக வழங்கத் தயார் – மஹிந்த

இரகசிய கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பணத்தை நன்கொடையாக வழங்கத் தயார் – மஹிந்த

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வெளிநாட்டு வங்கியொன்றில் தாம் இரகசியமாக வைப்புச் செய்துள்ள பணத்தை எவரேனும் கண்டு பிடித்துக்கொடுத்தால் அந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கத் தயார் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கான வரியை நீக்கவும், வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் இந்த 18 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட முடியும் என தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் தமது இரகசிய கணக்குகள் பற்றி விசாரணை நடத்த 18 மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ள போதிலும் இதுவரையில் எதனையும் கண்டு பிடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் அவ்வாறான கணக்குகள் காணப்பட்டால் முழுத் தொகையையும் அரசாங்கத்தின் கணக்குகளுக்கு மாற்ற முடியும்  என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More