இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்ததை அடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா அகதிகளும் காவல் துறையினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா அகதிகள் ஆணையகத்தின் பராமரிப்பில் கல்கிசை பகுதியில் குறித்த அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த இடத்தை இன்று, , காலை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் பயங்கரவாதிகளே அங்கு தங்கியிருப்பதாகவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தியும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து அங்கு ஏஏற்பட்ட பதற்றம் காரணமாக காவல் துறையினர், அகதிகளை தங்கள் பாதுகாப்பில் அழைத்து சென்றுள்ளனர்