Home இலங்கைகிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அறிவியல்நகர்  பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு நபா் ஒருவா் பலியாகி  உள்ளார் கொழும்பிலிருந்து யாழ்நோக்கி பயணித்த புகையிரத்தத்தில் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  சம்பவ இடத்திலே பலியான குறித்த நபரை அவ் புகையிரதத்திலையே ஏற்றி கிளிநொச்சி புகையிரதநிலையத்தில் இறக்கிவிட்டு புகையிரதம் யாழ் நோக்கி  சென்றுள்ளது

விபத்தில் இறந்தவர் யார் என இன்னம் அடையாளம் காணப்படாத நிலையில்  இது தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர்; விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ் விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கிளிநொச்சி  ஊடகவியலாளர்கள்    மீது புகையிரத ஊழியர்கள் அநாகரிகமானவகையில் நடந்துகொண்டதுடன் ஊடகவியலாளர்கள்களை தங்களின் பணிகளை செய்விடமால் இடையூறுகளையும் ஏற்படுத்தியும் உள்ளனர்.  இவை அனைத்தும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையிலையே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இது போல் குறித்த புகையிரத நிலைய ஊழியர்கள் பயணிகளுடனும்  அநாகரீகமான வாரத்தைப் பிரயோகங்களை மேற்கொள்வது  தொடர்ந்து இடம்பெறுவதாகவும் புகையிரத்தத்தில் பயணித்த பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More