Home இலங்கைகிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகின்றது

கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகின்றது

by admin


கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றது. இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது. மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநர் றோகித போகொல்லாமகவின்  கீழ் கொண்டு வரப்படுகின்ற அதேவேளை அடுத்த தேர்தலையடுத்து முதலாவது சபை கூட்டம் நடைபெறும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்கிழமை சப்ரகமுவ மாகாண சபை கலைந்துள்ளதுடன்  நாளை   நள்ளிரவுடன் வட மத்திய மாகாண சபையும் கலையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின்கீழ் மாகாண சபை கலையும் நாளிலிருந்து தேர்தல் ஆணையம் ஒரு வார காலத்திற்குள் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

எனினும் புதிய  தேர்தல் திருத்த சட்டம் காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More