Home இலங்கைஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் விளக்கமறியல்

by admin


ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில், இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 28 பேரும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட    ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்போது  அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற தடையை மீறி  ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  26 பேர்   கைது

Oct 6, 2017 @ 09:21

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர்   கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பேரணி மீது  காவல்துறையினர்  தண்ணீர் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியிருந்தது.

இதனைத்தொடர்ந்து   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More