Home இலங்கைகுரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை கண்காணிக்க விசேட பிரிவு

குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை கண்காணிக்க விசேட பிரிவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாகவும்  இது தொடர்பில்; இந்த விசேட பிரிவு வெகு விரைவில் உருவாக்கப்பட உள்ளதாகவும் உத்தியோகபூர்வ மொழிகள் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குரோத உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை ஊக்குவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மத நிறுவனங்கள் இந்த புதிய பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More