Home இலங்கைஅரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் -சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் -சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

by admin

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களின் வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றியதைக் கண்டித்தும், மீண்டும் அதனை வவுனியாவிற்கு மாற்ற வலியுறுத்தியும் 13 நாட்களுக்கு மேலாக   அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு உண்ணாவரதம் இருக்கும்  ம.சுலக்ஷன், க.தர்சன், இ.திருவருள் ஆகிய மூவரதும் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More