குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லைபீரிய ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஜோர்ச் வே ( George Weah ) முன்னிலை வாகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 15 பிராந்தியங்களில் 11 பிராந்தியங்களில் ஜோர்ச் வே கூடுதல் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜோர்ச் வேக்கு போட்டியாக களமிறங்கியுள்ள தற்போதைய துணை ஜனாதிபதி ஜோசப் போவாக்காய் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே வெற்றியீட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு வேட்பாளர் ஒருவர் குறைந்தபட்சம் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால் நவம்பர் மாதத்தில் இரண்டாம் சுற்று தேர்தல்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.