Home இந்தியாகுஜராத்தில் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

by admin


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை பாராவூர்தி மீது ஜீப் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர்   உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத்திலிருந்து மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான அலிராஜ்பூர் மாவட்டத்திற்கு சுமார் 25 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்றுக்கொண்டிருந்த பாராவூர்தி மீது ஜீப் மோதியதில் ஜீப்பில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட12 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்   குழந்தை ஒன்று சிகிச்சை    பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி  தூக்கத்தில் பாரவூர்தி மீது மோதியிருக்கலாம் என  காவல்துறையினர் சந்தேகம் வெளியட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More