குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தமது பெயரைக் குறிப்பிட்டு ரணில் சாட்சியமளித்துள்ளதாகவும் இந்தக் கருத்து மூலம் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்த வேண்டாமெனவும் அர்ஜூன் அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் கோப்குழு உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டுமெனவும் மஹிந்தானந்த அலுத்கமகே கோரியுள்ளார்.