குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களிலும் கடுமையான மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி வீசியதாக சிலர் பிரச்சாரம் செய்கின்ற போதிலும், காற்றின் வேகம் 100 கிலோ மீற்றரைத் தாண்டவில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது கடுமையான காற்றுடன் கூடிய காலநி;லையாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நிலவி வரும் காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.