158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த அரசாங்கத்திற்கு தெளிவான திட்டங்கள் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற உதவிகளைக் கூட அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொலனறுவை ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் அபிவிருத்தி தொடர்பில் எவ்வித கொள்கைகளையும் பின்பற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love