இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயத்துக்கான சம்பியன் பட்டத்தினை நான்காவது முறையாக இங்கிலாந்தின் லீவிஸ்
பிரான்சில் உள்ள அரண்மனையில் ஹாமில்டனுக்கு உலக சம்பியன் கிண்ணம் வழங்கப்பட்டுள்ளது.
2008, 2014, 2015 ஆண்டுகளிலும் ஹாமில்டன சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அதே சமயம் 20 சுற்றுக்களாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் 9சுற்றுக்களில் பினதங்கியதனை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு சம்பியன் பட்டத்தினை வென்றதில் உண்மையான திருப்தி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பார்முலா 1 கார்பந்தயத்துக்கான சம்பியன் படத்தினை ஜெர்மனியின் மைக்கல் சூமாக்கர் 7 முறையும் அர்ஜென்டினாவின் ஜூவான் மானுல் பாங்கியோ 5 முறையும் பிரான்சின் அலைன் புரோஸ்ட், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலுடன் இருவரும் தலா 4 முறையும் பெற்று 3ம் இடத்தில் உள்ள நிலையில் ஹாமில்டனும் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.