Home உலகம்டி.ஆர். கொங்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் பலி…

டி.ஆர். கொங்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் பலி…

by admin

டி.ஆர். கொங்கோ என அழைக்கப்படும் கிழக்கு கொங்கோவில் தீவிரவாதிகள் நடத்திய 15 ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டி.ஆர். கொங்கோவின்  செமுலிகி என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.கொல்லப்பட்ட அமைதிப்படை வீரர்களில் தான்சானியாவை சேர்ந்தவர்களும் கொங்கோவைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏடிஎப் என்ற தீவிரவாதக் குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஐ.நா. அமைதிப்படை மீது 1993-க்கு பிறகு நடந்த கொடூர தாக்குதல் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More