Home உலகம்பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று டொனால்ட் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் – 54 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று டொனால்ட் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் – 54 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

by admin

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று 54 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார்.  தேர்தலில் அவர் போட்டியிட்டபோதே, அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் அவருக்கு எதிராக 16 பெண்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தெரிவித்தனர். இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதுத் எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் வெளிப்படையாக விசாரணை நடத்தக் கோரியும், ஜனாதிபதி ட்ரம்பபை; பதவி விலகுமாறும் வலியுறுத்தி அந்நாட்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் அரசு சீர்திருத்தங்கள் குழுத் தலைவருக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளதுடன் இந்தக் கடிதத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 54 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடும் சமயங்களிலேயே ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மக்கள் அதனை ஏற்கவில்லை.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் மன்றம் மூலம் பதிலளித்துவிட்டோம். தற்போதும், அந்தப் பாதையையே முன்னெடுப்போம் என வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More