Home இலங்கையாழில் சமூர்த்தி மோசடி -இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை…

யாழில் சமூர்த்தி மோசடி -இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


யாழ்.மாவட்டதில் மோசடியில் ஈடுபட்ட சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த இரு சமூர்த்தி உத்தியோகஸ்தர்களும் வறிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட சமூர்த்தி கொடுப்பனவுகளில் பெருந்தொகையான பணத்தினை மோசடி செய்துள்ளனர். கணக்காய்வுகளின் போது குறித்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த இருவரும் ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்குமிக்கவர்கள் எனவும் குறித்த அரசியல் கட்சியின் செல்வாக்கினை பயன்படுத்தி ஒழுக்காற்று நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கொள்வதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More