குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவை யோசனையை அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி அனுமதிக்கான ஆகக் குறைந்த தகுதி தொடர்பிலான அமைச்சரவை யோசனையை அமுல்படுத்த வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயர்தரத்தில் இரண்டு திறமை சித்திகளும் ஒரு சாதாரண சித்தியும் மாணவ மாணவியருக்கு மருத்துவ கல்லூரியில் அனுமதி வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அமைச்சரவை தீர்மானத்தை அங்கீகரிக்கக் கூடாது என கோhஜிக்கை விடுத்துள்ளது
அரசாங்க மருத்துவ பேரவையின் தீர்மானத்திற்கு எதிராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பரிந்துரைகளை முன்வைத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.