குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவின் இலங்கை பிரசன்னம் தொடர்பில் இந்தியா பீதியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா இலங்கையில் பல்வேறு வர்த்தக மற்றும் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அண்மைக் காலமாக இந்தியா, சீனாவின் திட்டங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு வருவதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா இலங்கையை ஓர் சுயாதீனமானதும் இறைமையுடையதுமான நாடாக கருதவில்லை எனவும், தனது வீட்டு கொள்ளைப் புறமாகவே நினைத்து செயற்பட்டு வருதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சீன ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வர்த்தக முனைப்புக்கள் குறித்து இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.