Home உலகம்சவூதியில் சர்ச்சைக்குள்ளான நட்சத்திர ஹோட்டல் மீள திறக்கப்பட்டது

சவூதியில் சர்ச்சைக்குள்ளான நட்சத்திர ஹோட்டல் மீள திறக்கப்பட்டது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சவூதியில் சர்ச்சைக்குரிய நட்சத்திர ஹோட்டல் மீளவும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த நட்சத்திர ஹோட்டலில் சவூதி அரேபியாவின் முக்கிய இளவரசர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


சவூதி அரேபியாவின் ரியாத்தில் அமைந்துள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலே இவ்வாறு மீளவும் திறக்கப்பட்டுள்ளது.  இளவசரர்கள், அமைச்சர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியே இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More