Home இலங்கைதேர்தல் வன்முறையில் ஈடுபட்டால், தேர்தல் முடிவடையும் வரையில் பிணை வழங்கப்பட மாட்டாது

தேர்தல் வன்முறையில் ஈடுபட்டால், தேர்தல் முடிவடையும் வரையில் பிணை வழங்கப்பட மாட்டாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் வேட்பாளரோ , வாக்காளாரோ கைது செய்யப்பட்டால் தேர்தல் முடிவடையும் வரைக்கு அவர்களுக்கு யாழ்.மேல் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட மாட்டாது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் , 54 கிலோ கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மன்றில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே நீதிபதி அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தேர்தல் ஆணையகம் நீதியான , ஜனநாயக தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமுகமாக நீதிமன்றங்கள் செயற்பட வேண்டும். அதனால் யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் பாரதூரமான குற்றங்களுக்கு தேர்தல் முடிவடையும் காலம் வரையில் பிணை வழங்க பட மாட்டாது.

யாழில் இதுவரையில் பாரதூரமான தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகியில்லாத போதிலும் , ஒரு சில வாள் வெட்டு சம்பவங்கள் , கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

அதனால் கொலை , கொள்ளை வாள்வெட்டு சம்பவங்கள் போன்ற சமூக விரோத செயல்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்கினால் தேர்தல் கால வன்முறைகளை அதிகரித்து விடலாம். எனவே பாரதூரமான குற்றங்களுக்கு தேர்தல் முடிவடையும் வரையில் பிணை வழங்க முடியாது.

அத்துடன் அவை தொடர்பான அனைத்து வழக்குகளும் , தேர்தல் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேலும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More