மெல்போர்னில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் ரென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ரோஜர் பெடரர், ஹியோன் சங் உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இன்றைய போட்டியின் போது செக் குடியரசின் தோமஸ் பெர்டிச்சை எதிர்கொண்ட ரோஜர் பெடரர், 7-6, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பெடரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோன்று இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் தென்கொரியாவின் ஹியோன் சங், அமெரிக்காவின் சாண்ட்கிரெனை எதிர்கொண்டு 6-4, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றீட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள அரையிறுதி சுற்று போட்டிகளில் சிலிச் – எட்மண்ட்டையும் சங் – பெடரரையும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.