Home இலங்கைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உடற் பரிசோதனை….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உடற் பரிசோதனை….

by admin

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்துக்கு சென்ற பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் காவற்துறையினர், உடற் பரிசோதனை உட்பட, தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய பிரசார கூட்டம் மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு சென்ற பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பூரண உடல் பரிசோதனை மற்றும் உடமைகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ள பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்தார். இதனால் கூட்டத்துக்கு சென்ற மக்கள் “எமது கூட்டத்தில் கலந்துகொள்ளும் எமக்கே பரிசோதனையா” என விசனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More