Home இலங்கைமத்தள விமான நிலையம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

மத்தள விமான நிலையம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்தள விமான நிலையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். மத்தள சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியா விமானசேவை அதிகாரசபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பட்டுள்ளார். கூட்டு முயற்சியாக இவ்வாறு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கூட்டு சேர்வதன் மூலம் இந்த விமான நிலையத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்தக்கூடிய சாத்தியம் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமான நிலைய அபிவிருத்தி குறித்த உடன்படிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கையொப்பமிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More