Home உலகம்சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் ஐந்து பேர் பலி..

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் ஐந்து பேர் பலி..

by admin

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குவாமிஷ்லி நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்; ஆதிக்கம் செலுத்தி வருகின்ற குர்திஷ் போராளிகள் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து சிரியா அரசு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்றையதினம் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் இயங்கிவரும் பிரிதானியாவினை மையமாக கொண்டு இயங்கும் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More